×

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அவல் இடிக்கும் பணி தீவிரம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அவல் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவின் முக்கிய பொருளான அவல் இடிக்கும் பணி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், தங்களுக்கு விவசாயத்தை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக விளங்கும் நீர் நிலைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி கரையோர மக்கள் குறுவை, சம்பா, இப்படி எந்த போகத்தில் நெல் விளைந்தாலும் அந்த நெல்லில் கொஞ்சம் எடுத்து காவிரி தாய்க்கு படைப்பதை இன்றளவும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்படி எடுத்து வைத்த நெல்லை அவலாக இடித்து, இதை காவிரிக்கு படைப்பதும், உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் வழக்கம். துவக்கத்தில், கைகளால் அவல் இடிக்கும் பணியை செய்து வந்தனர். காலப்போக்கில் அந்த முறை மறைந்து தற்போது இயந்திரத்தின் மூலம் அவல் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பூதங்குடி அவல் இடிக்கும் நிலையத்திற்கு சேத்தியாத்தோப்பு, சோழத்தரம், கந்தகுமாரன், ஒரத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்….

The post ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அவல் இடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Adipperu ,Chettiyathopu ,Chettiyathopp ,Tamil Nadu ,Audiper ,Dinakaran ,
× RELATED கருவேல மரங்களை அகற்றி வெள்ளாற்றங்கரையை பலப்படுத்த வேண்டும்