×

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி வெட்டாறு, ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீர் திறப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பாசனத்திற்காக வெட்டாறு மற்றும் ஓடம் போக்கி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ரூ 16 கோடியே 35 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஜூன் 12ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறுவை தொகுப்பு திட்டமாக 50 சதவீத விதை மானியம் மற்றும் 100 சதவீத ரசாயன உர மானியம் வழங்கப்பட்டு வருகிறது.குறுவை சாகுபடி மாவட்டத்தில் மொத்தம் 98 ஆயிரத்து 721 ஏக்கரில் நடைபெற்றுள்ள நிலையில் மேலும் சுமார் ஆயிரத்து 200 ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் குறுவை பயிர்களுக்காக பொதுப்பணித் துறையினர் மூலம் ஆறுகளில் நீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் திருவாரூர் மாவட்ட பாசனத்திற்காக வெட்டாறு மற்றும் ஓடம் போக்கி ஆறுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது….

The post திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி வெட்டாறு, ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kuruvai ,Tiruvarur district ,Odampoki river ,Tiruvarur ,Vetaru ,Odam Boki ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!