×

சமூகநீதியை காப்பதில் கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளார்..! சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பாராட்டு..!

சென்னை: தலைவர் கலைஞரின் வழியை பின்பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியை காப்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சமூக நீதியை காப்பதில் கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளார் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சென்னை, தலைமை செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக்கல்வியில் 11,200 இடங்கள் இடஒதுக்கீடு இல்லாததால் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு முதுநிலை மருத்துவக்கல்வியில் 3 சதவீதம் தான் கிடைத்தது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே இந்த அநீதியை போக்க முதல்வர் தொடர் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். அதைப் போன்று மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டில், சமூக நிதியை நிலைநாட்டவும், தலைவர் கலைஞர் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார்.  முதுநிலை படிப்புகளில் 8 இடங்களுக்கு கீழ் இருந்தால் இடஒதுக்கீடு இல்லை என்பதை மாற்றி அதிலும் இடஒதுக்கீடு உண்டு என்பதை நிறைவேற்றினார். இதனால் பலர் பயனடைந்துள்ளனர். அதைப்போன்று எஸ்.டி பிரிவினருக்கு தனியாக 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி 69 சதவீமாக மாற்றியதும் தலைவர் கலைஞரின் சாதனை தான். எனவே மருத்துவக்கல்வியில் தமிழ்நாட்டில் முழுமையான சமூக நிதியை கொண்டு வர கலைஞர் அரசு சிறப்பாக செயல்பட்டது. அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞரின் வழியை பின்பற்றி சமூகநீதியை காப்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலப்பு திருமண இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும். நிதி உதவியை அதிகரிக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக்கல்வியில் தனியாக 50%  இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். கிராமபுறங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே வரலாற்று சாதனை படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இடதுசாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்….

The post சமூகநீதியை காப்பதில் கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளார்..! சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பாராட்டு..! appeared first on Dinakaran.

Tags : G.K. Stalann ,Association of Doctors for Social Equality ,Chennai ,Chief of ,Tamil Nadu ,Chief President ,Mukhtar Mukhya ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...