×

திண்டிவனம் அருகே சாலை அமைக்கும் பணி தொடங்கியது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தினகரன் செய்தி எதிரொலியாக சாலை அமைக்கும் பணி உடனே தொடங்கியது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் எறையானூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விகேஎஸ் பாண்டியன் நகரில் சாலை அமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் 5 தெருக்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் கற்கள் சாலையிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் வீடு வரை வாகனங்கள் எடுத்துச் செல்ல முடியாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளை சாலைகளின் சந்திப்பு அருகே நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் திருடு போகும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாலையில் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஜல்லி கற்கள் கலைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post திண்டிவனம் அருகே சாலை அமைக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Dindivanam ,Dinakaran ,Viluppuram District ,Maracanam Union ,Tindivanam ,
× RELATED மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை