×

3 எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு காட்டுப்பள்ளி மீனவர்கள் போராட்டம் வாபஸ்: 250 பேர் பணி புறக்கணிப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் ஒரு கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்பட 3 தனியார் நிறுவனங்களில் பழவேற்காடு பகுதியை சேர்ந்த 250 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறியும், கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வழங்கக் கோரியும் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் தளம் முன்பு மீனவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். தகவலறிந்ததும் பழவேற்காடு பகுதியில் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜெஎஸ்.கோவிந்தராஜன், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் அப்பகுதி மீனவர்களுடன் நேரில் வந்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வருவதற்குள் கூட்டத்தை ஆரம்பித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களிடம் பேசிய வருவாய்த்துறை மற்றும் எம்எல்ஏக்கள், இதுகுறித்து தொழில்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் முற்றுகை போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர்.  அதே நேரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கும்வரை, 250 மீனவர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாவும் தெரிவித்தனர்….

The post 3 எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு காட்டுப்பள்ளி மீனவர்கள் போராட்டம் வாபஸ்: 250 பேர் பணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kattupally ,Ponneri ,Kattupalli ,Meenjur, Palavekadu ,Adani Port ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு