×

கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும்: வெங்கடேசன் எம் பி

மதுரை: ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது. அதைப்போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளார். அகழாய்வு குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்று துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும். அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்….

The post கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும்: வெங்கடேசன் எம் பி appeared first on Dinakaran.

Tags : Keezadi ,Sivakalai ,Sangam ,Venkatesan ,Madurai ,Archeology Department of the Union Government ,Nalanda ,Saranath ,Lothal ,Tolaveera ,Amaravati ,
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர்...