×

தமிழில் பதவியேற்ற எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சிபிஎம் கட்சியை சேர்ந்த ராஜா. சட்டசபையில் பதவியேற்கும் போது தமிழில் சத்தியபிரமாணம் செய்தார். அப்போது உளமார்ந்த, தெய்வத்தின் பேரால் போன்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் மீண்டும் சத்தியபிரமாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தேவிகுளம் தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேவிகுளம் தனி ெதாகுதியாகும். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ராஜா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்.  இவர் ஒரு கிறிஸ்தவரைத்தான் திருமணம் செய்துள்ளார். அவரது தாய் எஸ்தர் மரணமடைந்த போது கிறிஸ்தவ முறைப்படி தான் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் என்று போலியாக சான்றிதழ் வாங்கி அதன்மூலம் தேர்தலில் போட்டியிட்டார். எனவே இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்….

The post தமிழில் பதவியேற்ற எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Congress ,MLA ,Thiruvananthapuram ,Raja ,CPM ,Devikulam ,Idukki district ,Kerala ,
× RELATED உடல் நலக் குறைவு காரணமாக கேரளாவில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து