×

தன்னார்வலர்களின் முயற்சியால் நாள் ஒன்றிற்கு 4 டன் குப்பைகள் மறுசுழற்சி குப்பை மேடாக இருந்த இடம் பூங்காவாக மாறியது

குன்னூர் : குன்னூரில் இயங்கி வரும் (க்ளீன் குன்னூர்) தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் நாள் ஒன்றிற்கு 4 டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் பொதுமக்கள் குப்பைகளை ஆறுகளிலும், ஓடைகளிலும் வீசி வந்தனர். இதனால் வன விலங்குகளின் குடிநீர் கடுமையாக மாசடைந்து வந்தது. அது மட்டுமின்றி குன்னூர் ஓட்டுப்பட்டறை அருகே நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மலைபோல் தேங்கியது. இதனால் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் (க்ளீன் குன்னூர்)  தன்னார்வ அமைப்பு இணைந்து குப்பை மேடாக இருந்த இடத்தை சுத்தம் செய்து கழிவு மேலாண்மை பூங்காவாக மாற்றியுள்ளனர். குன்னூர் நகராட்சியில் சேகரிக்கப்படும்  மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு, ‘பேலிங்’ இயந்திரம் மூலம் ‘பிளாஸ்டிக் பேக்கேஜ்’ செய்து, பர்னஸ் ஆயில் தயாரிக்க, அனுப்பப்படுகிறது.  தற்போது நாள் ஒன்றிற்கு 4 டன் வரை குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் 2 டன் குப்பைகள் மட்டுமே சேர்ந்ததாக அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். நவீன இயந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் சிறியளவிலான பிளாஸ்டிக் மக்கும் குப்பையில் கலந்து விடுவதால் முழுமையாக தரம் பிரிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர்.இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள அளக்கரையை சேர்ந்த தனியார் தேயிலை தொழிற்சாலையின் உரிமையாளர்கள் சுனில், சுமன் தம்பதியினர், மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சல்லடை இயந்திரம் உட்பட இரு இயந்திரங்களை இலவசமாக வழங்கினர்.  

இதனால் தற்போது அங்கு பணியில் ஈடுபடும்  தொழிலாளர்கள் எளிதாக பிளாஸ்டிக், பேப்பர், மாஸ்க் கழிவு மருத்துவ கழிவு உள்ளிட்டவற்றை எளிதாக பிரித்து எடுக்கின்றனர்.

மேலும் எடை அதிகமுள்ள பொருட்கள், மண் போன்றவற்றை சல்லடை இயந்திரமே தனியாக பிரித்தெடுக்கிறது. க்ளீன் குன்னூர் தன்னார்வலர்கள் தீவிர முயற்சியால்  சிறிய அளவிலான மையங்களில் இயந்திரம் பொருத்தி குப்பைகள் பிரிப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது….

The post தன்னார்வலர்களின் முயற்சியால் நாள் ஒன்றிற்கு 4 டன் குப்பைகள் மறுசுழற்சி குப்பை மேடாக இருந்த இடம் பூங்காவாக மாறியது appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Klein ,
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!