×

மூணாறில் 5 பேர் கைது ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

கம்பம்: தமிழக – கேரள எல்லையான மூணாறில் கடல் தங்கம் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சமான அம்பெர்கிரிஸை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக கேரள வனத்துறை, விஜிலென்ஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மூணாறு வனத்துறையினர் அங்குள்ள ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஐந்தரை கிலோ எடையுள்ள அம்பெர்கிரிஸ் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு தங்கியிருந்த மூணாறை சேர்ந்த முனுசாமி (48), அவரது தம்பி திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்த முருகன் (42), ரவிக்குமார் (40), தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (43), சேது (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். வனத்துறையினர் கூறுகையில், ‘‘இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் எண்ணெய் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ‘‘அம்பெர்கிரிஸ்’’ சர்வதேச சந்தையில் ரூ.8 கோடி மதிப்புடையது. அம்பெர்கிரிஸானது மசாலா தயாரிப்பு, மருத்துவ பயன்பாடு மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது’’ என்றனர்….

The post மூணாறில் 5 பேர் கைது ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Moonur ,Moonar, Tamil Nadu ,Kerala ,Moonanar ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...