×

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் புராதான சிற்பங்கள் ஆவணப்படுத்திட ஹெலிகேம் மூலம் படம் எடுக்கும் பணி

திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் புராதான சிற்பங்களை ஆவணப்படுத்திட ஹெலிகேம் மூலம் படம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய கோயில்களில் உள்ள புராதான சிற்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புராதான சிற்பங்கள் குறித்து ஆவணப்படம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதலில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள புராதான சிற்பங்களை ஹெலிகேம் கேமரா மூலம் படம் பிடித்து வருகின்றனர். 
தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக கோயிலிலுள்ள அனைத்து இடங்களையும் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்தூண் செதுக்கப்பட்டுள்ள புடை சிற்பங்களையும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தற்போது கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபங்களில் உள்ள சிற்பங்களை படம் பிடிப்பதற்காக தூய்மைபடுத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று அங்கு இருக்கும் ஒவ்வொரு தூண்களிலும் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களை படம் பிடிக்கும் பணி நடைபெற்றது.

The post ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் புராதான சிற்பங்கள் ஆவணப்படுத்திட ஹெலிகேம் மூலம் படம் எடுக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Jambukeswarar Akhilandeshwari Temple ,Trichy ,Helicam ,Thiruvanaikaval Akilandeswari Jambukeswarar Temple ,Jambukeswarar ,Akilandeswari Temple ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...