×

இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் சினிமா நடிகர் அதிரடி கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே விசாரணைக்கு சென்ற இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக சினிமா நடிகர் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் பண்ருட்டி அருகே ஏ. ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் சிவமணி (38). சினிமா நடிகரான இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தும்  தயாரித்தும் உள்ளார். இவர் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். 
இந்நிலையில் சிவமணி மீது உள்ள வழக்குகள் குறித்து விசாரிப்பதற்காக புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவரும், அவரது நண்பர்களும் சரியான ஒத்துழைப்பு அளிக்காமல் விசாரணைக்கு ஆஜராகாமல் போலீசாரை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதையடுத்து சிவமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருநாவுக்கரசு (49), கரும்பூர் ஸ்ரீதர் (37), பாக்கியராஜ் (39) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீசாரை திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக சினிமா நடிகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் சினிமா நடிகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Panrutti ,Thidi ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை