×

விவசாயிகளுக்கு இலவச ஆலோசனை வானொலிசேவை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மற்றும் மகசூல் அறக்கட்டளை சார்பில், விவசாயிகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் தகவல் வழங்கும் உழவர் சக்தி வானொலி சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், வானொலியை துவக்கி வைத்து, விவசாயிகள் இந்த வானொலியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும், இந்த வானொலி சேவைக்கு, 8929300707 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வேளாண்மை தகவல்கள், தோட்டக்கலைத் துறை தகவல்கள், அரசு மானிய தகவல்கள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் துவங்கப்பட்டுள்ளது என கூறினார். வேளாண்மை துணை இயக்குனர், ஏழுமலை, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சாந்தா செலின்மேரி, உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர்கள் சுரேஷ்குமார், பிரியங்கா, மகசூல் அறக்கட்டளையின் நிறுவனர் அஜய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post விவசாயிகளுக்கு இலவச ஆலோசனை வானொலிசேவை appeared first on Dinakaran.

Tags : Farmers Free Consulting Radio Service ,Deutur ,Chengalpattu District ,Madurandhayam ,Agriculture and Horticulture Department ,Yield Foundation ,Free Consulting Radio Service for ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...