மதுபான பிசினஸ் தொடங்கினார் ஷாருக்கான் மகன்: நெட்டிசன்கள் கடும் தாக்கு

மும்பை: மதுபான பிசினஸ் தொடங்கியுள்ளார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த ஷாருக்கான், இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான பதான் படத்தில் நடித்திருந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அவரது இந்த படம், பெரும் வெற்றி பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் மூலம் ஷாருக்கான் மீண்டும் லைம்லைட்டில் வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பாக அவரது டீன்ஏஜ் மகன் ஆர்யன் கான், போதை பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதை பார்ட்டியில் அவர் கலந்துகொண்டதாகவும் அவரிடம் போதை பொருட்கள் இருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதில் ஷாருக்கான் நொடிந்துபோனார். கடும் சட்ட போராட்டங்களுக்கு பிறகு ஆர்யன் கான் விடுதலை ஆனார். பின்னர் அவருக்கு போதை பொருள் வழக்கில் தொடர்பில்லை எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஆர்யன் கான், வெப்சீரிஸ் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இப்போது திடீரென மதுபான வியாபாரத்தை அவர் தொடங்கியிருக்கிறார்.

ஷாருக்கான் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. டியவொல் என்ற பெயரில் இந்த மதுபான பிராண்டை துவக்கியிருக்கிறார். இதற்காக பாலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்து, இந்த மதுபானத்தை ஆர்யன் கான் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பார்ட்டியில் மதுபானம் குடித்து போதையில் நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஆர்யன் கான். இதையெல்லாம் பார்த்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர். ‘போதை வழக்கில் சிக்கியும் இன்னும் இவர் திருந்தவில்லை. அப்பாவின் பெயரை ெகடுப்பதற்காகவே இப்படியொரு பிசினஸை தொடங்கியிருக்கிறார்’ என ஆர்யன் கானை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Stories: