×

நீர்வரத்து கால்வாயில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்-சிறுபாலம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப்பகுதியில் யாராவது இறந்தால் அடக்கம் செய்வதற்கு அந்தப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயைக் கடந்து சென்று ஆற்றங்கரையோரம் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.நேற்று அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜயன்(48) உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வழக்கம்போல் சடலத்தை அடக்கம் செய்ய சடங்குகளைமுடித்துவிட்டு சடலத்தை ஆற்றங்கரையோரம் உள்ள மயானத்திற்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இதனால் சடலத்தை ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் கால்வாய் நீரில் இறங்கி சென்று ஆற்றங்கரையில் அடக்கம் செய்து விட்டு மீண்டும் கால்வாயில் இறங்கி வீடு திரும்பினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை, வெள்ளக்காலங்களில் உறவினர்கள் யாரேனும் இறந்தால் இந்தக்கால்வாயை கடந்து செல்வது மிகவும் சிரமத்திற்குள்ளாகிறது. எனவே இடுகாட்டுக்கு சென்று இறுதி சடங்கு செய்வதற்கு வசதியாக சிறுபாலம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்….

The post நீர்வரத்து கால்வாயில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்-சிறுபாலம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Damkatu ,Annanagar ,Damkatu taluk Odukathur ,Dinakaran ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி