×

அமராவதியில் மரங்களின் மறைவில் வழிகாட்டி பலகைகள் -மாற்றி அமைக்க கோரிக்கை

உடுமலை :  உடுமலை அடுத்த அமராவதி பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. இந்த பகுதியையொட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சின்னாறு வனப்பகுதி மற்றும் கேரளா மாநிலத்தின் மூணாறு உள்ளிட்ட பகுதிகள் உள்ளது.இதனால் தினசரி ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவர். இவ்வாறு வரும் வாகன ஓட்டிகளுக்கு சரியான வழித்தடம் எளிதில் தெரியும் வகையில் பெரிய அளவில் ஆர்ச் போன்ற அமைப்பில் உடுமலை உட்பட பல இடங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் அமராவதிக்கு அருகிலுள்ள ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் அமராவதி சாலையில் ஒரு வழிகாட்டிப் பலகையும், மூணாறு சாலையில் ஒரு வழிகாட்டி பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறமும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியில் மரங்களின் மறைவில் வழிகாட்டி பலகையை அமைத்துள்ளனர்.இதனால், வாகன ஓட்டிகளால் வழிகாட்டிப் பலகையை பார்க்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு யாருக்கும் பயனற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை நெடுஞசாலைத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, உயரதிகாரிகள் வாகனஓட்டிகளுக்கு பயன்பெரும் வகையில் வழிகாட்டி பலகையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அமராவதியில் மரங்களின் மறைவில் வழிகாட்டி பலகைகள் -மாற்றி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amaravati ,Udumalai ,Amaravathi ,Anaimalai Tiger Reserve ,
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்