×

திருவில்லிபுத்தூர் அருகே தொடர்ந்து பெய்யும் மழையால் நிரம்பி வழியும் கிணறுகள்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே தொடர்ந்து பெய்த மழையால் கிணறுகள் நிரம்பி வழிகின்றன. இவற்றில் வாலிபர்கள் குளித்து மகிழ்கின்றனர்.திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ள ஏராளமான கிணறுகள் நிரம்பி வழிகின்றன. சுற்றுச்சுவர் இல்லாமல் தரைமட்ட அளவில் கிணறுகள் உள்ளதால் நிரம்பி வழிகிறது. இவற்றில், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் குளித்து மகிழ்கின்றனர்.இதுகுறித்து கருப்பசாமி கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் நேரம் தவிர நண்பர்களுடன் சேர்ந்து கிணறுகளில் சந்தோஷமாக குளிக்கிறேன். தொடர்ந்து பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. எனவே, நண்பர்களுடன் தினமும் கிணற்றில் குளிக்கிறேன். இதனால் புத்துணர்ச்சியாக உள்ளது என்று கூறினார்….

The post திருவில்லிபுத்தூர் அருகே தொடர்ந்து பெய்யும் மழையால் நிரம்பி வழியும் கிணறுகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvillyputtur ,Thiruvilliputtur ,Vadruyiripu ,
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...