டிவிட்டரில் நடிகையை ‘பிளாக்’ செய்த அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: தனக்கு ஜோடியாக நடித்த நடிகையை, டிவிட்டரில் அல்லு அர்ஜுன் பிளாக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புஷ்பா படத்தில் நடித்த பிறகு அல்லு அர்ஜுன், பான் இந்தியன் ஸ்டாராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் அவருக்கான ரசிகர்கள் பெருகியுள்ளனர். கடந்த, 2010ல் வருடு என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்தார். இந்த படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பானு மெஹ்ரா நடித்தார். ஒரு சில படங்களில் நடித்த அவர், அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் டிவிட்டரில் அல்லு அர்ஜுனை பானு மெஹ்ரா பாலோ செய்து வருகிறார். இப்போது, திடீரென பானுயை டிவிட்டரில் அல்லு அர்ஜுன் பிளாக் செய்துவிட்டார். இதை பார்த்து பானு அதிர்ச்சியடைந்தார். ‘நான் வருடு படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த நடிகை. அவர் யாரோ என நினைத்து என்னை பிளாக் செய்திருக்கிறார். இதனால் எனக்கு வருத்தம் இல்லை. தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாத ஒரு நடிகையால் வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என பானு விரக்தியாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இந்த பதிவு அல்லு அர்ஜுன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் பானுயை அன்பிளாக் செய்துவிட்டார். இது பற்றி பானு கூறும்போது, ‘அல்லு அர்ஜுனுக்கு பெரிய மனது. என்னை அன்பிளாக் செய்ததற்கு நன்றி. இப்போது சந்தோஷமாக உணர்கிறேன்’ என்றார்.

Related Stories: