×

லண்டன் ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன்-2 பின்னணி இசை

லண்டன்: லண்டன் ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன்-2, படத்தின் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள அப்பே ரோட் ஸ்டுடியோவில், நவீன தொழில்நுட்பத்தில் உயர்ரக இசை கோர்ப்பு பணிகள் நடைபெறும். பல ஹாலிவுட் படங்களுக்கான இசை கோர்ப்பு பணிகள் இங்கு நடக்கிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன்-2 படத்துக்கான பின்னணி இசை பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான், இந்த ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார்.

இதற்காக நேற்று முன்தினம் ரஹ்மானும் இயக்குனர் மணிரத்னமும் லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, நேற்று பின்னணி இசை கோர்ப்பு பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். இதற்கிடையில், அக நக என தொடங்கும் பாடலின் வரிகள் நிறைந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் பொன்னியின் செல்வன்-2 பட முதல் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.

Tags : Selvan ,2 ,Ponni ,London ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்