அப்புக்குட்டியின் ‘சூரியனும் சூரியகாந்தியும்’

தமிழில் பார்த்திபன், தேவயானி நடித்த ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை இயக்கியவர், ஏ.எல்.ராஜா. தற்போது அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘சூரியனும் சூரியகாந்தியும்’. டி.டி.சினிமா ஸ்டுடியோ தயாரிக்கும் இதில் அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர், ரிதி உமையாள், சந்தானபாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி நடித்துள்ளனர். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர்.எஸ்.ரவிப்பிரியன் இசை அமைத்துள்ளார். ஏ.எல்.ராஜா, செங்கதிர்வாணன் பாடல்கள் எழுதியுள்ளனர். டெய்லி குருஜி இணை தயாரிப்பு செய்துள்ளார். சாதிக்கத் துடிக்கும் ஒருவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை உயிரோட்டத்துடன் படமாக்கியுள்ளனர்.

Related Stories: