×

மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் தமிழில் பாட புத்தகங்கள்: திண்டுக்கல் ஐ.லியோனி தகவல்

சென்னை: திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 860 பள்ளிகள் உள்ளன. அதில் 400 பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 460 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தமிழக முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் முடிவு செய்த பிறகு மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு கல்விப் பணி சிறப்பாக செயல்படும்.  திருவள்ளூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் பணி சிறப்பாக நடக்கிறது. விரைவில் இக்கல்லூரி செயல்படும். பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளுக்கு  தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் அச்சடிக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதை எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளோம். கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். தாய்மொழியில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்க அண்ணா, கலைஞர் ஆகியோர் கண்ட கனவை நனவாக்கி, தாய் மொழியில் உயர்கல்வி  படித்தல் என்ற முதல்வரின் உயரிய லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றும். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தமிழ் வழியில் புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.திராவிடபக்தன், களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் இருந்தனர்….

The post மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் தமிழில் பாட புத்தகங்கள்: திண்டுக்கல் ஐ.லியோனி தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul I. Leony ,CHENNAI ,Tamil Nadu Textbook ,Educational Services Institute ,Tamil Nadu Warehouse Corporation ,Thiruvallur ,Dindigul I. Leoni ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...