×

குழந்தைகளுடன் இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (33). பெயின்டர். இவரது மனைவி கவுரி (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. தீஷித்தா (3) என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் இருந்தனர். ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கமும் உள்ளது. இதையொட்டி அவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் கவுரியிடம் தகராறு செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக கவுரி, ஏலச்சீட்டில் பணம் சேர்த்துள்ளார். இதையொட்டி கடந்த 18ம் தேதி அந்த சீட்டை எடுத்து, பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இதையறிந்த ரமேஷ், மது அருந்த  பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த  கவுரி, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு பைப்பில் கயிறு கட்டி தனித்தனியாக தீஷித்தா, அஸ்வின் இருவரையும் தூக்குப்போட்டு கொலை செய்தார். பின்னர் அவரும், அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி பட்டாபிராம் உதவி கமிஷனர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கவுரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால், திருவள்ளூர் ஆர்டிஒ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. விசாரணையில், ரமேஷ் பணம் கேட்டு, மனைவி கவுரியை தொல்லை செய்ததால் மனமுடைந்து 2 குழந்தைகளை கொன்று,  தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கவுரியின் தற்கொலைக்கு காரணமான ரமேஷை நேற்று  கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post குழந்தைகளுடன் இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Ramesh ,Dileepan town ,Tiruninnavur Nadukuthagai ,Gauri ,
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!