×

இந்தியில் நடிக்காதது ஏன்?.. அனுஷ்கா பதில்

ஐதராபாத், மார்ச் 15: ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னார், அனுஷ்கா. இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘சூர்யாவும், நானும் தமிழில் நடித்த ‘சிங்கம்’ படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னை அணுகினர். ஆனால், சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்னை காரணமாக அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. பிறகு என்னைத்தேடி வந்த சில இந்திப் பட வாய்ப்புகள், எனது இமேஜுக்குப் பொருத்தமாக இல்லாதால் நடிக்க மறுத்துவிட்டேன். தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று  நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’’ என்றார்.

Tags : Anushka ,
× RELATED மலையாளத்தில் அனுஷ்காவின் முதல் படம்: பேய் வேடத்தில் நடிக்கிறார்