×

25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பள்ளி ஓடை ஏரி பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்

சேதுபாவாசத்திரம் : தஞ்சை மாவட்டம் இரண்டாம்புளிகாடு பள்ளிஓடை ஏரி பாசன வாய்க்கால் தூர்வாரவேண்டும் என சரபேந்திரராஜன்பட்டிணம் ஒன்றிய குழு உறுப்பினர் மீனவராஜன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்,அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் வசித்து விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் இரண்டாம்புளிக்காடு ஊராட்சி பள்ளிஓடை ஏரியின் பாசன பகுதியில் அமைந்துள்ளது.இந்த ஏரிக்கு கடந்த 1934 ம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாப்பான்கன்னி ஆற்றின் குறுக்கே அணைவைத்து தண்ணீரை தேக்கி ஏரியை நிரப்பி விவசாயம் செய்து வந்தனர்.அதன் பின்னர் காவேரி ஆறு தண்ணீர் மூலம் நேரடி பாசன வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் ஏரியை நிரப்பி சாகுபடி செய்தனர்.ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது .ஒரு சில இடங்களில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால் இந்த பகுதியில் உள்ள சாகுபடி நிலங்கள் அனைத்தும் 25 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடக்கிறது. குறவன்கொல்லையிலிருந்து நாடியம் வழியாக சுமார் 3 கி.மீ தூரமுள்ள இந்த வாய்க்கால் உடனடியாக தூர்வாரி தருவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்….

The post 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பள்ளி ஓடை ஏரி பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sedhubavasaram ,Sarabendrajanpatinam ,Union ,Thanjam District II School Rail ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு