×

யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொருத்தம்

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு வனப்பகுதியில் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி வனத்துறை  சார்பில் பொருத்தப்பட்டது. கூடலூர் வனக்கோட்டம் பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவயல் அருகிலுள்ள கரும்பமூலா, அய்யன்கொல்லி, கோட்டப்பாடி, ஓர்கடவு, விலங்கூர் அருகே குளிமூலா மற்றும் பந்தலூர்-கொளப்பள்ளி சாலை,  எடத்தால் உள்ளிட்ட யானை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஏர்லி வார்னிங் சிஸ்டம் எனும் யானைகள் வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவிகள் பொருத்தப்பட்டன.மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் பிதர்காடு வனச்சரகர் மனோகரன், வனவர்கள் பரமேஷ்வரன், மான்பன், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், நந்தகுமார், மோகன்ராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து வனச்சரகர் மனோகரன் கூறுகையில்,`இப்பகுதியில் யானை நடமாட்டம் இருந்தால் கருவியில் இருந்து ஒருவித ஒலி எழும். அதன்மூலம், யானை வருவதை பொதுமக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க உதவும். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து யானையிடமிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….

The post யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Pidargarad forestland ,Bandalur ,Dinakaran ,
× RELATED பழங்குடியினர் காலனியில் கனமழையால் மண்சரிவு