×

சலார் படத்தில் ஏழு நிமிட காட்சியில் யஷ்

பெங்களூரு: யஷ் நடிப்பில் பான் இந்தியா படங்களாக வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களை இயக்கியவர், பிரசாந்த் நீல். தற்போது பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்குகிறார். இதை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் பிருத்விராஜ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு வேடம் ஒன்றில் யஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் யஷ் தோன்றும் காட்சிகள் ஏழு நிமிடங்கள் இடம்பெறும் என்று  கூறப்படுகிறது.


Tags : Yash ,
× RELATED சட்டீஸ்கர் மதுபான ஊழல் அமலாக்கத்துறை...