ரூட் நம்பர் 17 படத்துக்காக பூமிக்குள் குகை செட்

சென்னை: நேனி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள படம், ‘ரூட் நம்பர் 17’. இதில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரீஷ் பெராடி, அருவி மதன், அமர் ராமச்சந்திரன், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், நிஹால், எவர்கிரீன் அற்புதானந்தம் நடித்துள்ளனர். மலையாள இசை அமைப்பாளரான அவுசே பச்சன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக தென்காசிக்கு அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில், பூமிக்கு அடியில் 5,500 சதுர அடிபரப்பளவில் பிரமாண்ட குகை செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  ஜித்தன் ரமேஷ் மற்றும் பலர் நடித்த முக்கியமான சிில காட்சிகள் குகைக்குள் படமாக்கப்பட்டன. அந்த குகைக்குள் காற்று வருவதற்கான வழியே இல்லை என்றாலும், மின்விசிறியை பயன்படுத்தினால் காட்சி களின் இயல்பு பாதிக்கும் என்று கூறியதால், 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கிக்கொண்டு ஜித்தன் ரமேஷ் நடித்தார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை 14 சர்வ தேச விருதுகள் வென்ற ‘தாய்நிலம்’ படத்தின் இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார்.

Related Stories: