ஜி.வி.பிரகாஷ் குமாரின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி: கோவையில் மே 27ம் நடக்கிறது

கோவை: இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் இயங்குபவர், ஜி.வி.பிரகாஷ் குமார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெயரிடப்பட்ட அவரது இசை நிகழ்ச்சி, வரும் மே 27ம் தேதி கோவையிலுள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்த அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார்.  அப்போது அவர் பேசும் போது, ‘பொதுவாக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இசைக் கச்சேரியைப் பற்றி அறிவிப்பார்கள். இப்போது மாணவர்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு எப்போதும் மாணவர்கள்தான் விவிஐபிகள். இதற்கு காரணம், மாணவர்களின் முன்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. மாணவர்கள் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினால் எனக்கு பேராற்றல் கிடைக்கிறது என்று நம்புகிறேன். பள்ளியிலும், கல்லூரியிலும்  எப்போதுமே நான் சராசரி மாணவனாக இருந்துள்ளேன். பெற்றோர்களை ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் நடந்து வந்தி ருக்கிறேன். அந்தவகையில் நான் நல்ல மாணவன் என்று சொல்ல முடியும்’ என்றார்.

Related Stories: