ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’, 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, இப்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா உள்பட பலர் இதிலும் நடித்து வருகின்றனர். இந்த படம் துவங்கும் முன்பு சாய் பல்லவி இதில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்து வந்தது. இந்நிலையில் சாய் பல்லவி நடிப்பது உறுதியாகியுள்ளது. மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதற்காக வெறும் 10 நாட்கள் மட்டும் சாய் பல்லவி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதனால் படத்தில் அவருக்கு சிறு வேடம் என்றும் அவர் கொல்லப்படுவதாக காட்சி இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. மே மாதம் அவர் புஷ்பா 2 படப்பிடிப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திலும் ஒரு கவர்ச்சி பாடல் இடம்பெறச் செய்யவும் அதில் பிரபல நடிகையை நடிக்க வைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த பாடல் காட்சியில் பாலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகையை நடிக்க வைக்க முயன்று வருகின்றனர்.