×

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு இபிஎஸ்தான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கே தெரியும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முழு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இந்த ஆய்வின்போது விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர்ராஜா, மருத்துவகல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர் குருநாதன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் சவுமியா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் சாந்திமலர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கே தெரியும். திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது கூட இந்த தேர்வை அவர் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தான் இந்த புன்னியத்தை கட்டிக்கொண்டார். கடந்த 4 ஆண்டு காலமாக தமிழகத்துக்கு நீட் தேர்வு வர உதவி செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நீட் தேர்வு மூலம் 13 பேர் உயிரிழந்தனர். கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.அப்போது தான் வேறு வழியில்லாமல் 7.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதற்கான மொத்த காரணமும் எடப்பாடி பழனிசாமி தான். கொரோனா 3ம் அலை தொடர்பாக பொதுமக்களுக்கு பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஓரிரு தினங்களில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25% தடுப்பூசிகளில், 10% மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்தவும், அதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் இன்று கோவை மாவட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார். கடந்த 4 ஆண்டு காலமாக தமிழகத்துக்கு நீட் தேர்வு வர உதவி செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நீட் தேர்வு மூலம் 13 பேர் உயிரிழந்தனர்….

The post தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு இபிஎஸ்தான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : EBISTAN ,Minister Ma. Subramanian ,chennai ,tamil nadu ,Edapadi ,Minister ,Ma. Subramanyan ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...