வசந்த் ரவியின் அஸ்வின்ஸ்

பாபிநீடு பி வழங்க, ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத், பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்கும் படம், ‘அஸ்வின்ஸ்’. திரைக்கு வந்த ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வசந்த் ரவி, தற்போது ‘அஸ்வின்ஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை எழுதி தருண் தேஜா இயக்குகிறார்.

இவர் பல குறும்படங்களை இயக்கி விருதுகள் பெற்றவர். இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையைக் கட்டவிழ்த்துவிடும் 1,500 ஆண்டு பழமையான சாபத்துக்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவைச் சுற்றி வரும் இப்படம், முழுநீள சைக்கலாஜிக்கல் ஹாரர் வகையைச் சேர்ந்தது. மற்றும் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், ‘நிலா காலம்’ உதயதீப், சிம்ரன் பரீக் நடிக்கின்றனர். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்ய, விஜய் சித்தார்த் இசை அமைக்கிறார்.

Related Stories: