×

ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்!: 35 பேர் பலி..60 பேர் படுகாயம்..!!

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆடைகள், உணவு பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சடர் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலையில் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நிகழ்விடத்திலேயே 35 பேர் பலியாகினர். காயங்களுடன் மீட்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடைகளும் தரைமட்டமாகியுள்ளன. பக்ரீத் காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் மிக கொடூரமானது என்று ஈராக் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தையில் நடப்பாண்டில் இதற்கு முன்னர் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்!: 35 பேர் பலி..60 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : goods for ,Bakrit festival ,Iraq ,Baghdad ,
× RELATED 85 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்