×

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு

சென்னை, மார்ச் 9: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்துக்கு பிறகு, புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தற்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சிம்பு நடிப்பில், தற்போது பத்து தல படம் ரிலீசாவதற்கு தயாராகி வருகிறது. அதன் பிறகு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பட நிறுவனம் சிம்புவின் கால்ஷீட்டை வாங்கியுள்ளது. கமல் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. அந்த படத்தைதான் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் படங்களையும் தயாரிக்க உள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என ராஜ்கமல் பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Desingu Periyasamy ,
× RELATED ரகசிய டெஸ்ட் ஷூட்டில் சிம்பு