×

மேகதாதுவைத் தொடர்ந்து காவிரி – குண்டாறு திட்டம் எதிர்த்து கர்நாடகா வழக்கு

புதுடெல்லி: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாகக் கடலில் கலக்கும் 40 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டது, காவிரி- குண்டலாறு இணைப்புத் திட்டம். 1958ம் ஆண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2008ம் ஆண்டு ரூ.3,290 கோடியில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்த  ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்போவதாக, கடந்த ஆண்டு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.இந்த நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், ‘காவிரி குண்டாறு விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழகத்திற்கு தான் லாபம். இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகா அரசு மீண்டும் இதுபோன்று அடாவடி தனமான செயல்பாடுகளில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post மேகதாதுவைத் தொடர்ந்து காவிரி – குண்டாறு திட்டம் எதிர்த்து கர்நாடகா வழக்கு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Meghadatu ,NEW DELHI ,Cauvery ,Kollidam ,Kaveri-Kundalar ,Kaveri ,Dinakaran ,
× RELATED தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில்...