×

வரலட்சுமியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் சந்தோஷ் பிரதாப்

சென்னை: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி நடித்துள்ள படம்,  ‘கொன்றால் பாவம்’. வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சந்தோஷ் பிரதாப் கூறியதாவது: மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து, நல்ல கதையம்சம் கொண்ட கதைகள் கண்டிப்பாக ரசிகர்களை உடனே சென்று அடையும். கன்னடத்திலும், பிறகு தெலுங்கு ரீமேக்கிலும் மாயாஜாலம் செய்த ‘கொன்றால் பாவம்’ படம், அனைத்து நடிகர்களுக்கும் தேவையான இடத்தைக் கொடுத்து, அவர்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது.


இதில் எனக்கு வலுவான கேரக்டர் கிடைத்துள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் பேசப்படும். படம் முடிந்த பிறகு கூட இவ்விரு அம்சங்களும் ரசிகர்களை ஈர்க்கும். வரலட்சுமி எந்த மொழியிலும் ஜொலிக்கக்கூடிய திறமையான கலைஞர். நன்கு பயிற்சி பெற்ற நடிகை. அவருடனும் மற்றும் சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றி யதில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. செழியன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

Tags : Santhosh Pratap ,Varalakshmi ,
× RELATED கிரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண்