×

துறைமுகத்தில் நடக்கும் கதை ‘அகிலன்’: ஜெயம் ரவி

சென்னை: ‘பூலோகம்’ படத்தை தொடர்ந்து என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம், ‘அகிலன்’. ஹீரோயின்களாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சுந்தர் தயாரித்துள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: எனது 20 வருட திரையுலக வாழ்க்கையில் அனைவருடைய ஒத்துழைப்பும், பாராட்டும் எனக்கு நிறையவே கிடைத்துள்ளது. எப்போதும் நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். மேக்கிங்கைப் பொறுத்தவரை, ‘அகிலன்’ மிகவும் கஷ்டமான படம். இதெல்லாம் கிடைக்குமா? இதையெல்லாம் படமாக்க முடியுமா என்று நாங்கள் நினைத்தபோது,  தயாரிப்பாளரால்தான் இதையெல்லாம் உருவாக்க முடிந்தது. மற்றும் அனைத்து விஷயங்களையும் சாத்தியமாக்கிய படக்குழுவிருக்கு நன்றி. பிரியா பவானி சங்கர், தமிழ் பேசி  நடிக்கும் ஒரு ஹீரோயின். ஒவ்வொரு படத்திலும்  மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.

இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் மிகப்பெரிய  திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர். சினிமாவின் மூலம் ரசிகர்களுக்கு நல்ல விஷயங் களைச்  சொல்ல வேண்டும் என்று துடிப்பவர். இப்படம் நன்றாக உருவானதற்கு அவரும், அவரது டீமும் ஒரு காரணம். தான்யா ரவிச்சந்திரன் கேரக்டர் சர்ப்ரைஸாக இருக்கும். துறைமுகத்தை மையமாக வைத்து மாஃபியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. வெயில், உப்புத்தண்ணீர் என்று எல்லா சிரமங்களையும் கடந்து இக்காட்சியைப் படமாக்கினோம். எனது கேரக்டர் சற்று எதிர்மறை யாக இருக்கும். தோற்றத்திலும் லேசான மாற்றம் இருக்கும். திரையுலகில் எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. எனக்கு நான்தான் போட்டி. யாருடனும் போட்டி போடாமல், கடைசிவரை இப்படியே தனியாக இருந்துவிடுகிறேன். ‘அகிலன்’, என்னால் மறக்க முடியாத படமாகும்.

Tags : Akilan ,Jayam Ravi ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!