
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து வரலட்சுமி கூறுகையில், ‘உண்மையிலேயே இது எனக்கு மிகவும் பிடித்த படம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு படம் முழுவதும் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்த படம். நிறைய படங்களில் நடிப்போம். திருப்தி என்பது சில படங்களில் மட்டுமே கிடைக்கும். அதுபோன்ற மனநிறைவு இப்படத்தின் மூலம் கிடைத்தது.
‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு மிரட்டலான இசையை சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். தயாள் பத்மநாபன் அதிக டேக்குகள் எடுக்காமல், ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் படமாக்குவார். சின்ன படம், பெரிய படம் என்பதை தாண்டி, கதைக்காக இப்படம் வெற்றிபெற வேண்டும்’ என்றார். தயாள் பத்மநாபன் கூறும்போது, ‘கன்னடத்திலும், மலையாளத்திலும் ‘கொன்றால் பாவம்’ கதை புத்தகமாக வெளியாகி, பிறகு கன்னடத்தில் இக்கதையை இயக்கினேன். அங்கு மாநில விருது கிடைத்ததால், பிறகு தெலுங்கில் இக்கதையை இயக்கினேன். இப்போது தமிழில் இயக்கியுள்ளேன்’ என்றார்.