×

ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடல் நிகழ்ச்சி: இந்திய சினிமாவுக்கு கவுரவம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம், பல்வேறு மொழிகளில் திரைக்கு வந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இது அமெரிக்காவின் உயர்ந்த விருதாகும். இதேபோல், ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடலுக்கு விருது கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. அப்போது விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலை பாடகர்கள் ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா பாட உள்ளனர். தெலுங்கில் இந்த பாடலை இவர்கள் இருவரும்தான் பாடியிருந்தனர். மரகதமணி இசையமைத்திருந்தார். ஆஸ்கர் விழாவில் இந்திய பட பாடல் நிகழ்ச்சி நடப்பது, நம் நாட்டுக்கான கவுரவமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்ஆர்ஆர் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

Tags : Oscars ,
× RELATED 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக...