3ம் தேதி 4 படங்கள் ரிலீஸ்

இம்மாதம் தமிழில் திரைக்கு வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலிருக்கிறது. வரும் 3ம் தேதி 4 படங்கள் ரிலீசாகின்றன. சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம், ‘அயோத்தி’. சமூகத்திலுள்ள மத ரீதியான பிரச்னைகள் குறித்து பேசும் இப்படத்தை ஆர்.மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள சைக்கோ திரில்லர் படம், ‘பஹீரா’. பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசை அமைத்துள்ளார். தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’, ’குட்டி’, ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை தவிர, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் ’அரியவன்’ படம் உருவாகியுள்ளது.

புதுமுகம் ஈஷான், ப்ரணாலி ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் வரதராஜ் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த் பாபு, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன், சாரா நடித்துள்ள படம், ‘பல்லு படாம பாத்துக்க’. பாலமுரளி பாலு இசை அமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: