×

பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமனம் வழங்கும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிடெக்னிக் முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில்  மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 2020-21ல் டெல்பி டிவிஎஸ், சால்காம்ப், டாஃபே, சிடிடிஐ போன்ற பல முன்னணி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை அரசு வழிகாட்டுதலின் படி, உரிய கொரோனா பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு முதல்வர் முனைவர் செல்வராஜ்  வழங்கினார். இதில் டெல்பி டிவிஎஸ் அதிகாரிகள் மோகனசுந்தரம்,  புருஷோத்தமன் பங்கேற்றனர். துறைத்தலைவர்கள் முனைவர் இசக்கிமுத்து, முனைவர் சிவக்குமார், பணியமர்த்தும் அலுவலர் லோகாபிராம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்….

The post பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமனம் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Bhaktavatsalam Polytechnic College ,Kanchipuram ,Polytechnic ,Principal ,Selvaraj ,Bhaktavatsalam ,College ,Recruitment Ceremony ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...