×

கஞ்சா கடத்திய ஆசாமிகள் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற பூந்தமல்லியை சேர்ந்த மணி(28), விஷ்வா(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி(36), கலுதாஸ்(38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.  இதேபோல், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை பாலத்தின் கீழ் நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தூக்கிவிடச்சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் அந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஓடினர். அவர்களை விரட்டிபிடித்ததில் பையில் கஞ்சா இருந்தது. இதுதொடர்பாக அய்யப்பன்தாங்கல் சீனு(21), மாங்காடு  சவுந்தரராஜன்(24), கைது செய்து தலைமறைவான நபரை தேடுகின்றனர்….

The post கஞ்சா கடத்திய ஆசாமிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Ganja ,Poontamalli ,Parivakkam Sudugadu ,Dinakaran ,
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்