×

கொரோனா தடுப்பூசி போடுங்கள், பாகுபலியாக மாறுங்கள் : பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு

புதுடெல்லி:கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாகுபலியாக மாறிவிடலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல் விலை, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அனைத்து எதிர்கட்சிகள் பேச திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த கூட்டத்தொடரில் கொரோனா தொற்று தொடர்பான விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளது. அதன் மூலம் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொரோனா தொற்றை ஒழிப்பதில் புதிய நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கைகளில் தடுப்பூசி போடுவதன் மூலம் பாகுபலி போன்று உருவாக முடியும். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு எதிரான போரில் 40 கோடி பேர் பாகுபலியாகியுள்ளனர்.  இது இன்னும் முன்னுக்கு கொண்டு செல்லப்படும். உலகம் முழுவதும் கொரோனா கடுமைையாக பிடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த வேண்டும்.மாலைக்குள் விவாதம் முடியும் பட்சத்தில் நான் கொரோனா தடுப்பு குறித்த விளக்கமான தகவல்களை தெரிவிப்பேன் என்று நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுகொள்கிறேன். நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் எந்தவிதமான கேள்வி கேட்டாலும் அதற்கு அரசு தரப்பு பதிலளிக்க ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஜனநாயகத்திற்கும், மக்கள் நம்பிக்கைக்கும், வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்….

Tags : PM ,Narendra Modi ,New Delhi ,Monsoon Session of ,Parliament ,
× RELATED டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு!!