×

உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா தவிப்பு

ஐதராபாத்: உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது.

இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல பட வாய்ப்புகளை அனுஷ்கா இழந்தார். நயன்தாரா தமிழில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, அனுஷ்காவுக்கு தமிழில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், இடையில் தனது தோற்றத்தை ஸ்லிம்மாக காட்டும்படியான புகைப்படங்களை அனுஷ்கா வெளியிட்டார். அதை பார்த்து அவர் மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறிவிட்டதாக சிலர் தகவல் பரப்பினர்.

ஆனால் தற்போது, கோயில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது சொந்த ஊரான மங்களூருக்கு வந்தார் அனுஷ்கா. அப்போது உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

Tags : Anushka ,
× RELATED மலையாளத்தில் அனுஷ்காவின் முதல் படம்: பேய் வேடத்தில் நடிக்கிறார்