சிவா ஜோடியானார் மேகா ஆகாஷ்

சென்னை: மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பகவதி பெருமாள், சாரா, நான் கடவுள் ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா நடித்துள்ள படம், ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கியுள்ளார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இதை லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார்.

ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 24ம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. தவிர, மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘காசேதான் கடவுளடா’ ரீமேக், ‘சலூன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. ராம் இயக்கத்திலும் சிவா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: