×

குக்கர் கட்சியில் சின்ன மம்மிக்கு எதிராக அலை உருவாகி இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போதை தலைக்கேறினா… என்ன நடந்தது என்றே தெரியாமல்… சஸ்பெண்ட் ஆர்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல சில கோரிக்கைகளை முன்வைத்து, சிஇஓ ஆபீஸ் முன்னாடி, கடந்த 2 நாளைக்கு முன்னதாக ஆசிரியருங்க, கண்டன ஆர்பாட்டத்துல ஈடுபட்டாங்க. இந்த ஆர்பாட்டத்துல, மாவட்டத்துல இருக்குற தலைமை ஆசிரியருங்க, ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் கலந்துக்கிட்டாங்க. அந்த ஆர்ப்பாட்டத்துல 3 எழுத்து பெயர் கொண்ட வட்டார கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட காடு பாக்கம் ஏரியாவோட தலைமை ஆசிரியர் குடிபோதையில தட்டுத்தடுமாறி வந்திருக்காரு. வந்தவரு, ஆர்ப்பாட்டம் செஞ்சிகிட்டிருந்த ஆசிரியருங்க முன்னாடி போய் நின்னு திடீர்னு, சாஸ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினாராம்… பதறிப்போன ஆசிரியர்கள் அவரை தூக்கி நிறுத்தி போராட்டம் நடந்த இடத்தில் ஓரமாக உட்கார வைத்துவிட்டார்களாம். குடிபோதையில் வந்த ஆசிரியரை பார்த்து மற்ற ஆசிரியருங்க ரொம்ப வேதனைப்பட்டாங்க.. சில மணிநேரத்தில் போதை தெளிந்து வீட்டுக்கு போய்விட்டாராம். அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லையாம். மறு நாள் சஸ்பெண்ட் ஆர்டர்.. அதற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம். குடிபோதையிலயா, நாம இவ்வளவு ஆட்டம் போட்டோம் என்ற விவரமே அதன் பிறகு தான் தெரிந்ததாம்… அந்த அளவுக்கு குடி ஆசிரியரை மதி மயங்க வைத்து இருக்குன்னா பார்த்துக்கோ…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கடன்காரனாக ஆக்கிட்டு… நல்லா இருக்கியா என்று நலம் விசாரித்தால் மட்டும் போதுமா… எலக்‌ஷன் செலவுக்காக வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தத்தளிக்கிறோமே… இனி இங்கிருந்தால் உள்ளாட்சி ேதர்தலில் இருக்கும் சொத்தையும் விற்று போண்டி ஆகிவிடுவோம்… இனி போன் வந்தால் நடந்ததை சொல்லக்கூடாது… எலக்‌ஷன் பணத்தை தான் கேட்கணும். என்று முடிவு செய்து இருக்காங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அசம்பிளி எலக்‌ஷனுக்கு பிறகு இலையின் முக்கிய தலைகள், முன்னாள்  எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்வதே கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு  பெரும் சவாலாக இருக்குதாம். இதில் சின்னமம்மி வேற, தினமும் ஒரு  நிர்வாகியிடம் பேசி குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருக்காங்களாம். இந்த  நிலையில் குக்கர் கட்சியில் தற்போது பொறுப்பில் இருக்கும் முக்கிய  நிர்வாகிகளை குறிவைத்து இலையின் தலைகள் காய்நகர்த்துறாங்களாம். இதுக்காக  ஒரு மாஸ்டர் பிளானும் போட்டிருக்காங்களாம். அதாவது அசம்பிளி எலக்‌ஷனில்  குக்கர் கட்சி சார்பில், பெரும்பாலும் மாவட்ட செயலாளர்களையே வேட்பாளர்களாக  நிறுத்தினார்களாம். அப்போது உங்கள் எலக்ஷன் செலவுக்காக ஒரு குறிப்பிட்ட  அமவுண்ட் வந்து சேரும் என்று வாக்குறுதி கொடுத்தாங்களாம். இதை நம்பி  கடன்வாங்கி செலவு செய்தவர்களுக்கு இதுவரை பண்ட் வந்து சேரலையாம். பலர் தலைமறைவாகிவிட்டாங்க.. சிலர் கடன்காரர்களாகிவிட்டாங்க… இப்படி அவஸ்தைப்படுகிறவர்களிடம், நல்லா இருக்கீங்களா என்று சின்ன மம்மி நலம் விசாரிப்பது சரியா… முதல்ல சொன்னபடி எங்களை கடனாளி என்ற பெயரில் இருந்து மீட்டெடுங்க.. இனிமேல் நலம் விசாரிக்காதீங்க… கரன்சியை கொடுத்துட்டு பேசுங்க.. என்று வேட்பாளராக குக்கர் கட்சியில் நின்று தோற்றுபோனவர்களில் பலர் இப்படிதான் இனி, சின்ன மம்மியிடம் கறாராக பேசி முடிவு செய்து இருக்காங்களாம். அதாவது கரன்சி கொடு… நலம் விசாரி என்ற அலை உருவாகி இருக்காம்… இப்படி  பாதிக்கப்பட்ட நபர்களை தான் இலை கட்சி தற்போது கவனித்து வருதாம். அவர்களை நேரில் சந்தித்து,  ‘‘எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். நாம எல்லாம் அண்ணன் தம்பி. உள்ளாட்சி எலக்ஷன்ல, ஒண்ணா ஓர்க் பண்ணுவோம்.  தாய்வீட்டுக்கே நீங்கெல்லாம் வந்திருங்க’’ என்று நைசாக பேசி, தூண்டில் போடுறாங்களாம். தலைமறைவாக உள்ள தலைகள், கடனாளிகளாக உள்ளவர்கள் கரன்சியை பேசு.. கட்சியில் சேருகிறோம் என்ற டிமாண்டை வைத்து இருக்காங்களாம்.  இது குக்கர்  தலைமைக்கு மேலும் கடுப்பை உண்டாக்கி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒருத்தரை பற்றி தெரியாமல், முன்ன, பின்ன யோசிக்காம அவர் கொடுத்த வாக்குறுதியை மக்களிடம் சொன்னால்… இப்படி தான் பின்னாளில் கஷ்டப்பட வேண்டி இருக்கும்போல…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரின் வெற்றிலைக்குப் பெயர் போன தொகுதியின் இலைக்கட்சி மாஜி எம்எல்ஏ, தர்மயுத்த நாயகருக்கு ஆதரவாக இருந்து வந்தார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மீண்டும் ‘வெற்றிலை’ தொகுதியில் களமிறக்கப்பட்டார். தேர்தலில் நின்று தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுக்கு பிறகு இவர் தொகுதிக்குள் வருவதில்லை. ஆனாலும், இவரைத்தேடி இலைக்கட்சி நிர்வாகிகள் செல்கின்றனராம். காரணத்தை விசாரிச்சா, தேர்தல் நேரத்தில் இவரது ஆதரவாளர்களில் சிலர், வாக்காளர்களுக்கு ‘டோக்கன்களை’ விநியோகித்து, இதற்கென ஒரு தொகை தருவதாக கூறி ரகசிய பிரசாரம் செய்து இருக்காங்க. டோக்கன் வாங்கியவர்கள், இலைக்கட்சி நிர்வாகிகளை தெருவில் நடக்க விடாமல், பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்களாம். கட்சி நிர்வாகிகளோ முன்னாள் எம்எல்ஏவானவர் தொகுதி பக்கம் வந்தால்தானே பணம் கேட்க முடியும் எனக் கூறி வருகிறார்களாம். இது ஒருபுறமிருக்க, தேர்தல் காலத்தில் உடனிருந்த பலரும் இப்போது முன்னாள் எம்எல்ஏவானவருடன் தொடர்பில் இல்லையாம்… டோக்கனுக்காக கடன் வாங்கியா தர முடியும்… இவரை நம்பி டோக்கன் கொடுத்து வார்டில் பெயரை கெடுத்துக் கொண்டோம் என்று இப்போது இலை கட்சியினர் புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post குக்கர் கட்சியில் சின்ன மம்மிக்கு எதிராக அலை உருவாகி இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Cooker ,Chinna Mummy ,
× RELATED 6 பிரஷர் குக்கர் குண்டு பறிமுதல்