×

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த டோனி

 கிரிக்கெட் வீரர் டோனி, யோகி பாபுவுக்கு தனது கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. இவர் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். பல மொழிகளில் படங்களை தயாரிக்க உள்ளார். முதல் கட்டமாக தமிழில் லெட்ஸ் கெட் மேரீட் என்ற படத்தை தயாரிக்கிறார்.

இதில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். விஷ்வஜித் இசையமைக்கிறார். இதில் காமெடி கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். படப்பிடிப்பின்போது, திடீரென டோனி ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் யோகி பாபு நடித்துக் கொண்டிருந்தார். டோனியை சந்தித்த யோகி பாபு, நான் உங்களது ரசிகன் என சொல்லியிருக்கிறார். யோகி பாபு நடித்த சில படங்களை குறிப்பிட்டு டோனியும் அவரை பாராட்டியுள்ளார்.

அப்போது தனது ரசிகருக்கு பரிசு தரும் விதமாக தனது பேட் ஒன்றை கொண்டு வந்து அதில் யோகி பாபுவை வாழ்த்தும் வாசகம் எழுதி கையெழுத்து போட்டு தந்துள்ளார் டோனி. இந்த பேட் உடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட யோகி பாபு, ‘உங்கள் நினைவாக நீங்கள் கொடுத்த இந்த பேட்யை பாதுகாப்பாக வைப்பேன். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு நன்றி டோனி சார்.

நீங்கள் ஆடிய ஆட்டங்களின் நினைவுகளை போல், தமிழ் சினிமாவில் நீங்கள் வந்திருக்கும் இந்த நினைவுகளையும் மனதில் வைத்துக்கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Tony ,Yogi Babu ,
× RELATED குய்கோ விமர்சனம்