சச்சினுடன் சூர்யா சந்திப்பு

மும்பை: சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா. சூர்யா தனது மகள் தியாவின் படிப்புக்காக மும்பையில் வசித்து வருகிறார். ஜோதிகாவும் அவர்களது மகனும் அங்கேயே உள்ளனர். இந்நிலையில் ஏதேச்சையாக நேற்று சச்சின் டெண்டுல்கரை மும்பையில் சந்தித்துள்ளார் சூர்யா. அப்போது, அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சூர்யா, மரியாதையும் அன்பும் என பதிவிட்டிருக்கிறார். இது குறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, ‘இது எதிர்பாராத சந்திப்பு. இதற்கு பின்னால் எந்த காரணமும் கிடையாது. சூர்யாவுடன் சந்திப்பு நடந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சச்சின் தெரிவித்தார்’ என்றனர்.

Related Stories: