×

ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (40) பரிதாபமாக பலியானார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவரான டேனிஷ் சித்திக், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார். இவர், ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செய்தி சேகரிப்பு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இப்பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததால் அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கன் பாதுகாப்பு படையுடன் சென்ற சித்திக், தலிபான்கள் தாக்குதலில் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியாகி உள்ளார்.இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரித் மமுண்ட்சே இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் பட்டம் பெற்ற சித்திக், பல்வேறு அரிய புகைப்படங்களை எடுத்தவர். பத்திரிகையாளர்களுக்கான உயரிய புலிட்சர் விருதை பெற்றவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.* மியான்மரில் ரோஹிங்கியா சமூகத்தினர் எதிர்கொண்ட வன்முறையை புகைப்பட ஆவணமாக எடுத்ததற்காக 2018ம் ஆண்டு அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.* கொரோனா 2ம் அலையில் இந்தியாவில் சடலங்கள் கொத்து கொத்தாக எரிக்கப்படுவது, ஆக்சிஜன் படுக்கை வசதியின்றி ஒரே படுக்கையில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற சித்திக்கின் புகைப்படங்கள் வைரலாகின.* இந்தியாவில் கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்கள், போக்குவரத்து வசதியின்றி நடந்தே சொந்த கிராமங்களுக்கு செல்லும் அவலங்களையும் தனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தியவர் சித்திக். …

The post ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Taliban ,Afghanistan ,Kabul ,Danish Siddiqui ,Maharashtra ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...