×

காணாமல் போன சிறுவர்கள் திருநங்கையாக மீட்பு

பண்ருட்டி:  தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் கடந்த 8ம் தேதி திடீரென மாயமாகினர். இதுதொடர்பாக அவர்களது பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிறுவர்களை தேடி வந்தனர். சிறுவர்கள் அடிக்கடி தொலைபேசியில் பல்வேறு நபரிடம் பேசியதாக தெரிகிறது. அதன்படி சிறுவர்களின் செல்போன் நம்பர்களை கொண்டு தீவிர விசாரணை செய்தனர். இதில் சிக்னல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்கவரப்பட்டு கிராமத்தில் காட்டியது. அந்த கிராமத்திற்கு பெற்றோருடன் போலீசார் சென்றனர்.   அங்கு சென்ற போலீசார் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மாயமான சிறுவர்கள் இருவரும் திருநங்கையாக மாறியது போல் ஆடையணிந்து இருந்தனர். இதனையடுத்து திருநங்கையாக இருந்த சிறுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது உடனடியாக அவர்கள் வரவில்லை. தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் பெற்றோரிடம் செல்ல சம்மதித்தனர்.  விசாரணையில் இருவரும் 10ம் வகுப்பு படித்து வந்ததாகவும், உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டதால் வீட்டில் சொல்ல தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் திருநங்கையுடன் தொடர்பு ஏற்பட்டதால் நேராக இங்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  …

The post காணாமல் போன சிறுவர்கள் திருநங்கையாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Panrutti ,Theni district ,allinagar ,Dinakaran ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை