யோகி பாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

காமெடி வேடங்களில் நடிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் யோகி பாபு, சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘லக்கி மேன்’.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதையும், ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றியும் படம் பேசுகிறது. சில நேரங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவது கூட அதிர்ஷ்டம்தான் என்பதையும் படத்தில் சொல்லி இருக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் நடித்துள்ளனர். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

Related Stories: