கீர்த்தியின் கிரிக்கெட் படம்

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல் ஆகிய ஜனரஞ்சகமான விஷயங்களுடன் உருவாகியுள்ள படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ், நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்கியுள்ளார்.

 தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. கணேசமூர்த்தி, சவுந்தர்யா கணேசமூர்த்தி, பா.ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் பிரபா, ஜெய்குமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுகிறது.

Related Stories: